கொழும்பின் பல பகுதிகளில் நாளை மறுதினம் (18) 9 மணி நேரம் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை (NWSDB) அறிவித்துள்ளது.
அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தண்ணீரைப் பெறும் பிரதான உள்ளீட்டு பம்பிங் நிலையத்தில் ஏற்பட்ட மின் தடை காரணமாக அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
அதற்கமைய நாளை மறுதினம் முற்பகல் 10.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 12.30 மணி வரை நீர் விநியோகம் இடை நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும்.
அதேநேரம் பத்தரமுல்லை, பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டே, ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொடை, நாவல, கொலன்னாவ, ஐடிஎச், கொட்டிகாவத்த, அங்கொடை, வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்த, மஹரகம, பொரலஸ்கமுவ, தெஹிவளை, ரத்மலானை, மொரட்டுவ ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும்.
இந்த நீர் விநியோகத் தடை காரணமாக நுகர்வோருக்கு ஏற்படும் சிரமத்திற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வருத்தம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.