இலங்கை மத்திய வங்கியானது, அதன் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கடந்த ஒகஸ்ட் 29ஆம் திகதி 2000 ரூபாய் புழக்கத்துக்கு விடப்படும் ஞாபகார்த்த நாணயத்தாளை வெளியிட்டது.
எனவே புதிய நாணயத்தாளை தங்கு தடையின்றி, ஏற்றுக்கொள்வதையும் விநியோகிப்பதையும் வசதிப்படுத்தும் பொருட்டு, உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் அவற்றின் பணம் கையாளும் இயந்திரங்களை அளவமைக்கும் செயன்முறையை முன்னெடுக்கின்றன.
எனவே இந்த நாணயத்தாள்கள் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் ஊடாக படிப்படியாக பொதுமக்களின் புழக்கத்துக்கு விடப்படும்.
மேலும் அளவமைக்கும் செயன்முறை நிறைவடைந்தவுடன் புதிய நாணயத்தாள் அனைத்து வங்கிகள் மூலமும் தங்குதடையின்றி பயன்படுத்தப்படும் எனவும் இலங்கை மத்திய வங்கி உறுதியளித்துள்ளது.