நீண்ட காலமாகத் தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பெப்ரல் அமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பொது நிர்வாகம், உள்நாட்டு விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்னவுக்கு அனுப்பிய கடிதத்தில், பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று இயக்குநர் ரோஹன ஹெட்டியாராச்சி, மாகாண சபை அமைப்பு ஒரு பிரதிநிதித்துவ ஜனநாயக கட்டமைப்பாக மீண்டும் நிறுவப்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
தற்போது அது அதிகாரிகள் கையில் மட்டுமே இருப்பது ஜனநாயகத்திற்குப் புறம்பானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வாக்களிக்கும் உரிமை அரசியலமைப்பின் 3ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி மக்களின் இறையாண்மை அதிகாரத்தின் ஒரு பகுதியாகும்.
நீண்டகால தாமதம் ஜனநாயக செயல்முறைகள் மீதான மக்களின் நம்பிக்கையை பலவீனப்படுத்தியுள்ளதாகவும் ரோஹயாராச்சி எச்சரித்துள்ளார்.