மறுமலர்ச்சி நகரத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட உள்ளூராட்சி வாரம் இன்று முதல் (15.09.2025) ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி, இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை முழு நாட்டையும் உள்ளடக்கியவாறு இந்த திட்டத்தை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
சமூகத்தின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மற்றும் வாழ்க்கைச் சூழலைப் பாதுகாக்கும் சூழலை உருவாக்குவதும், எதிர்காலத் தொலைநோக்குப் பார்வையைப் பாதுகாக்கும் நகரத்தை உருவாக்குவதும் இந்த வாரத்தின் நோக்கமாகும் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் பி. ருவான் செனரத் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“‘மறுமலர்ச்சி நகரம்’ என்ற முக்கிய கருப்பொருளுடன் உள்ளூராட்சி வாரத்தை நாங்கள் தொடங்குகிறோம்.
சமூகத்தின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும், வாழ்க்கைச் சூழலைப் பாதுகாக்கும் மற்றும் எதிர்காலத் தொலைநோக்குப் பார்வையைப் பாதுகாக்கும் மறுமலர்ச்சி நகரத்தை உருவாக்க, பொது நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தலைமையிலான தொடர்ச்சியான திட்டத்தில் கைகோர்க்க அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம்.” என்றார்.