நாட்டிலிருந்து போதைப்பொருட்களை ஒழிக்கும் முயற்சிகளில் அரசாங்கத்துடன் கைகோர்க்குமாறு வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி. சரத் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பொலன்னறுவையில் இடம்பெற்ற விழாவொன்றில் உரையாற்றிய பிரதி அமைச்சர், இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் அரசியல்வாதிகள், ஆயுதப்படைகளின் உறுப்பினர்கள் , பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் அடங்கிய ஒரு பரவலான வலையமைப்பாக விரிவடைந்துள்ளது என்றார்.
போதைப்பொருட்களின் ஆபத்துகளிலிருந்து அடுத்த தலைமுறையைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் முதன்மையான சவால்களில் ஒன்று என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த நோக்கத்தை அரசாங்கத்தால் மட்டும் அடைய முடியாது என்பதை பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும் போதைப்பொருட்களுக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து பொதுமக்களும் ஒன்றுபட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
போதைப்பொருட்களை ஒழிக்க பொதுமக்கள் ஒன்றுபடவேண்டும் – வீடமைப்பு பிரதி அமைச்சர்