சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) வெளியிட்டுள்ள சமீபத்திய டி20 தரவரிசையில் இலங்கை 7ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
நேற்று (13) இடம்பெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியதன் ஊடாக இலங்கை அணி ஒரு இடம் முன்னேறி 7ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதனால், பாகிஸ்தான் அணி ஒரு இடம் பின்தங்கி 8ஆவது இடத்திற்கு நகர்ந்துள்ளது.
தற்போதைய தரவரிசையில், இந்தியா முதலிடத்தைத் தக்கவைத்துள்ள நிலையில், அவுஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளன.