இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பு மாநகர எல்லைக்குள் அமைந்துள்ள வீடு சொத்துக்களுக்கான சோலை வரி 2026 முதல் ஒரு வீதத்தால் அதிகரிக்கப்பட்டது.
நீர்கொழும்பு மாநகர சபையின் மாதாந்தக் கூட்டம் மேயர் சட்டதரணி எச்.எம்.டி.ரொபட் ஹீன்கெந்த தலைமையில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
வரி அதிகரிப்பு தொடர்பான பிரேரணையை முன்வைத்து நகர பிதா ஹீன்கெந்த உரையாற்றும்போது நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதான காரியாலயத்திற்கு உட்பட்ட எல்லைக்குள் உள்ள வீட்டு சொத்துக்களுக்கு மாத்திரம் வரியை 2025 முதல் 1 வீதத்தால் அதிகரிப்பதற்காக மாநகர சபை சட்டத்திற்கு அமைய தீர்மாணம் எடுத்தோம். இதன் அங்கீகாரத்தை பெறுவதற்காக மேல் மாகாண ஆளுநருக்கு அனுப்பிவைத்தோம். ஆளுநரின் அங்கீகாரம் தாமதமாகி கிடைத்ததினால் 2025ம் ஆண்டில் அதிகரிக்க முடியவில்லை. 2026 முதல் வீட்டு சொத்துக்களுக்கான வரி 7 வீதத்திலிருந்து 8 வீதமாக 1 வீதத்தால் அதிகரிக்கப்படும்.
இந்த அதிகரிப்பு கொச்சிக்கடை மற்றும் தலஹேன உப அலுவலக எல்லைகளுக்குள் அமைந்துள்ள வீட்டு மற்றும் வணிக சொத்துக்களுக்குப் பொருந்தாது.
நகர பிதா தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் நாம் வரி அறவிடுவதில்லை என எங்கும் சொல்லவில்லை. உரிய முறையில் அரவிடவேண்டும் என்றே கூறினோம். உலகில் எந்த நாடுகளிலும் வரி அறவிடாமல் செயல்படுவதில்லை. அதிகரிப்பின் பயண் மக்களுக்கு சென்றடையும். வீதி விளக்கு பொறுத்துதல் வீதி அபிவிருத்தி சம்பளம் வழங்குதல் போன்றவற்றிற்கு பயண்படுத்தப்படுகின்றன.
நிலுவையை அறவிடவில்லை என எதிர்கட்சியின் சுட்டிக்காட்டுகிறார்கள். இதனை முன்பிருந்தவர்கள் செய்யத் தவறினார்கள். நாம் நிலுவையையும் அறவிடுவோம் என்றார்.
எதிர்கட்சி உறுப்பினர்களான தயார நிலங்க (பொதுஜன முன்னணி), என்.எம். நுஸ்ரி ஆகியோர் உரையாற்றும்போது போது நாம் இந்த பிரேரணைக்கு எதிர்ப்பு. வரி அறவிடுவது தேமச கொள்கைக்கு மாற்றமானது. மக்கள் பெரும் அசெளகரியத்தில் வாழ்க்கை நடாத்துகின்றனர். வரி செலுத்தாதவர்கள் பாரிய அளவினர் உள்ளனர் சுமார் 16 கோடி ரூபா வரி நிலுவையில் உள்ளது. 1வீதம் அதிகரிப்பதைவிட நிலுவையை அறிவிட்டால் அதனைவிட கூடுதலாக கிடைக்கும் என சுட்டிக்காட்டினர்.
தேமச உறுப்பினர் சட்டதரணி எம்.என்.எம். பஸீர் உரையாற்றுகையில் நாம் நினைத்தவாறோ பொறுப்பேறற விதத்திலோ அதிகரிக்கவில்லை. முன்னைய ஆட்சிகாலத்தில் நினைத்தவாறு வரி அறவிட்டார்கள். கடை வாடகைகளைக் கூட பெறவில்லை. தமது சகாக்களுக்கு நினைத்தவிதத்தில் டென்டர் வழங்கினர். பெட்மின்டன் விளையாட்டு மைதன டென்டரிலும் ஊழல் இடம்பெற்றுள்ளது. 59 ஆயிரம் ரூபா கேள்வி இருக்கும் போது 29 ியிரத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. இதனையும் நாம் தேடிப்பார்போம்.
மக்களுக்கு சேவை செய்யவே இந்த அதிகரிப்பு. ராஜபக்ஷாக்களை போசிப்பதற்கல்ல என்றார்.
ஆளும்கட்சி எதிர்கட்சி பலர் தமது கருத்துக்களை முன்வைத்தனர். எதிர்கட்சியினர் வாக்கெடுப்பை கோரியபோது வாக்கெடுப்பு இடம்பெற்றது. வரி அதிகரிப்பிற்கு ஆதரவாக 35 வாக்குகளும் எதிராக 12 வாக்குகளும் அளிக்கப்பட்டன. வாக்களிப்பின் போது ஒருவர் சபையில் இருக்கவில்லை.