ஹட்டன் நகரின் பல பகுதிகளிலும் போக்குவரத்து பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் 12.09.2025 ஹட்டன், ஸ்ரீ பாத, மஸ்கெலியா, பொகவந்தலாவ மற்றும் பலாங்கொடை போன்ற பிரதான வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள், பொது போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் ஹட்டன் போக்குவரத்து பொலிஸாரால் அவசர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
குறித்த சோதனையின்போது பொது போக்குவரத்து வீதி நடைமுறையினை பின்பற்றாதவர்கள், அபாயகரமான மேலதிக உதிரிபாகங்களைக் கொண்டு பல நிறங்களில் பொருத்தப்பட்டிருக்கும் மின்குமிழ்கள், அதிக ஓசையை எழுப்பக்கூடிய ஒலி எழுப்பிகளின் பயன்பாடு உள்ளிட்ட மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தில் வாகனம் ஒன்றை இயக்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள 21 விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது, பழுதடைந்த வாகனங்கள் சில பொலிஸாரால் அவதானிக்கப்பட்ட நிலையில் அபாயகரமான மேலதிக உதிரிபாகங்களைக் அகற்றி ஒழுங்குப்படுத்துவதற்கும் குறைபாடுகளை சரிசெய்வதற்கும் சாரதிகளுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.
குறிப்பாக போக்குவரத்து ஒழுங்கும், விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் சில சாரதிகளுக்கு அறிவுரைகள் வழங்கியதுடன் இதனை மீறும் சாரதிகளுக்கு நீதிமன்றம் ஊடாக எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
[4:48 a.m., 2025-09-13] +94 77 949 0994: இலஞ்சம் ஊழலைத் தடுக்க போக்குவரத்து பொலிஸாரின் உடலில் கெமரா
நாடு முழுவதும் உள்ள அனைத்து போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் உடலில் அணியக்கூடியெ கெமராக்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்க, அதிகாரிகளின் பொறுப்பை உறுதி செய்வதையும், ஊழலைத் தடுப்பதற்கும், வெளிப்படையாக தங்கள் கடமைகளைச் செய்வதற்கான வாய்ப்பை பொலிஸாருக்கு வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில சாரதிகள் தங்கள் தவறுகளை மறைக்க அதிகாரிகள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் மற்றும் அதிகாரிகள் செய்யக்கூடிய தவறுகள் அனைத்தும் இந்த கெமராக்களில் பதிவு செய்யப்படும் என்றும், அனைவரின் பொறுப்புணர்வையும் உறுதி செய்யும் என்றும் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.