மஹரகம புவக்பிட்டிய விபஸ்ஸயாராம விஹாரையில் நடைபெறும் எசல மகா பெரஹெரா காரணமாக போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, 13.09.2025 சனிக்கிழமை இரவு 7.30 மணி முதல் அதிகாலை 3.00 மணி வரையான காலப்பகுதியில் இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பெரஹெரா விபஸ்ஸயாராம விஹாரையில் இருந்து தொடங்கி விபஸ்ஸயாராம வீதி, தெஹிவளை வீதி, மஹரகம டிப்போவிற்கு அருகிலுள்ள வித்யாகார மாவத்தையில் இடது புறமாக வித்யாகார மாவத்தை வழியாக பயணித்து ஹைலெவல் வீதி, எல்ஹேன வீதியில் வலது புறம் பயணித்து மஹரகம மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் மீண்டும் தெஹிவளை வீதி வழியாக விகாரைக்கு செல்லவுள்ளது.
எனவே, பெரஹெராவின் போது பின்வரும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
* ஹைலெவல் வீதியில் கொழும்பு திசை நோக்கிச் செல்லும் வாகனங்கள் ஜனாதிபதி சந்தியிலிருந்து பழைய வீதியையும், தெஹிவளை, பிலியந்தலை மற்றும் பொரலஸ்கமுவ பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் ஜனாதிபதி சந்தியின் இடதுபுறம் உள்ள வீதியை பயன்படுத்தலாம்.
*ஹைலெவல் வீதியில் கொட்டாவ திசை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் பொரலஸ்கமுவ ஊடாகவும், தெஹிவளை, பிலியந்தலைக்கு பயணிக்கும் வாகனங்கள் வத்தேகெதர சந்தியிலிருந்து வத்தேகெதர வீதி வழியாகவும் பயணிக்கலாம்.
*பொரலஸ்கமுவ திசையிலிருந்து மஹரகம கொட்டாவ ஹைலெவல் வீதி ஊடாக பயணிக்கும் வாகனங்கள் வத்தேகெதர வழியாக வெவ வீதி வழியாக பயணிக்கலாம்.
*பிலியந்தலை திசையிலிருந்து மஹரகம, கொட்டாவை, கொழும்பு திசை நோக்கி பயணிக்கும் வாகனங்கள், சொம்போ ஹோட்டலுக்கு அருகில் வலது புறத்தில் உள்ள வீதி வழியாக பயணிக்கலாம்.