முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கொழும்பில் வீடு வழங்குவதற்கு நான்கு பேர் முன்வந்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
இந்த நான்கு வீடுகளில் ஒன்றைப் பார்வையிடுமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர் இதுவரை அந்த வீட்டைப் பார்வையிடவில்லை என்றும் மேலும், வீடு வழங்க முன்வந்தவர்களில் ஒருவர் தமிழர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மஹிந்த ராஜபக்ஷ கொழும்புக்கு திரும்புவது குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை , தற்போது தங்காலையில் உள்ள தனது இல்லத்தில் சிறிது காலம் தங்க விரும்புவதாகவும், தேவை ஏற்படும்போது கொழும்புக்கு திரும்புவார் என்றும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன மேலும் தெரிவித்தார்