2026 நிதியாண்டுக்கான வரைவு ஒதுக்கீட்டு சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு, ஒப்புதலுக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை தயாரிப்பதற்கு கடந்த ஜூலை முதலாம் திகதியன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள 2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.
குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.










