போதைப்பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அநுராதபுரம் – மித்தெனிய பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக சிலர் இன்று (08) பிற்பகல் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் பரவி வரும் போதைப்பொருள் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் போதைப்பொருளுக்கு ஆதரவாக உள்ள அரசியல்வாதிகளை மக்களுக்கு வெளிப்படுத்துமாறு பேராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.