வெல்லவாய – தனமல்வில பிரதான வீதி, யாலபோவ டிப்போவுக்கு எதிரில் இன்று (08) காலை லொறியொன்றும் மோட்டார் வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தில் மோட்டார் வாகனத்தில் பயணித்த இருவர் காயமடைந்து வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்தின்போது லொறி வீதியில் கவிழ்ந்துள்ள நிலையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.