குறைந்த நேரத் தொழில்களுக்கு அதிக வேதனம் வழங்குவதாக உறுதியளிக்கும் இணைய விளம்பரங்கள் தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கையை விடுத்துள்ளது. மோசடிகளை மேற்கொள்வோர், இணைய விளம்பரங்கள் மூலம் தனியாட்களைக் குறிவைத்து, போலியான தொழில் வாய்ப்புக்களுக்காகப் பதிவு கட்டணம் அல்லது வைப்புத்தொகையைக் கோருகின்றனர்.
இந்தநிலையில், தொழில் மோசடிகளை எவ்வாறு அடையாளம் கண்டு தவிர்ப்பது என்பது குறித்து மக்களுக்கு தெளிவூட்ட இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு சமூக ஊடக பிரசாரம் ஒன்றை ஆரம்பித்துள்ளது