மத்திய அதிவேக வீதியில் 91ஆவது கிலோமீட்டர் தூண் அருகில் நடந்த வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றொருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இன்று (03) அதிகாலை லொறியொன்றும் பவுசர் வாகனமொன்றும் மோதிக்கொண்டதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் உயிரிழந்தவர் லொறி சாரதியின் உதவியாளர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லொறியின் அடிப் பகுதியில் உடல் நசுங்கி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.