பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரியவின் தலைமையில் கடந்த 21ஆம் திகதி கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவில் மூன்று அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரசாங்க நிறுவனமொன்றின் தலைவர் பதவிகளுக்கான நியமனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கு அமைய, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக (கலாநிதி) ஹர்ஷன சூரியப்பெருமவின் நியமனத்துக்கும், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளராக டபிள்யூ.பி.சேனாதீரவின் நியமனத்துக்கும், இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக ஏ.எச்.எம்.யூ.அருண பண்டாரவின் நியமனத்துக்கும் இங்கு அனுமதி வழங்கப்பட்டது.
அத்துடன், சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு சந்தன திசாநாயக்கவை நியமிப்பதற்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.