மேல் மாகாணத்தில் ஐந்து பேரில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் மணில்க சுமனதிலக தெரிவித்துள்ளார்.
இலங்கை வைத்திய சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய அவர், அதிகப்படியான சீனி நுகர்வு இந்த நிலைக்கு வழிவகுத்ததுள்ளதாக கூறியுள்ளார்.மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளது. தொற்றா நோய்களும் வேகமாக அதிகரித்து வருகின்றன.
80% இறப்புகள் தொற்றா நோய்களால் ஏற்படுகின்றன. உணவு செரிக்கப்பட்டு குளுக்கோஸாக உறிஞ்சப்படுகிறது.
இதனால் நீரிழிவு உட்பட பல நோய்கள். பருமனான குழந்தைகளிடையே நீரிழிவு நோய் பரவலாக உள்ளது.
இலங்கை அதிக சீனி உட்கொள்ளும் நாடுகளில் ஒன்றாகும். ஒரு நபர் ஒரு வருடத்தில் 25 முதல் 30 கிலோ வரை சீனியை உட்கொள்கிறார்.
வயது வந்தவர் ஒரு நாளைக்கு 3 அல்லது 4 தேக்கரண்டி சீனியை உட்கொள்கிறார்.” என்றார்.
இதேவேளை, நாட்டில் உள்ள குழந்தைகளிடையேயும் சீனி நுகர்வு அதிகரித்துள்ளதாக இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை வைத்திய சங்கத்தின் வைத்திய நிபுணர் சுரந்த பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
“சிறு குழந்தைகள் ஒரு நாளைக்கு அதிகளவான சீனியை உட்கொள்கிறார்கள்.
கொழுப்பு உட்பட பல நோய்கள் இதனால் ஏற்படுகின்றன. உணவில் இருந்து மேலதிக சீனி மற்றும் உப்பை நீக்க வேண்டும்” என்றார்