முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாளை(22) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பதவிக் காலத்தில் அமெரிக்காவிற்கும் பின்னர் இங்கிலாந்துக்கும் மேற்கொண்ட பயணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை இங்கிலாந்து பயணத்தின் ஒரு பகுதி தனிப்பட்ட காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அரச நிதியில் இருந்து நிதியளிக்கப்பட்டதாகவும், ரூ. 16.9 மில்லியன் செலவாகியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது .

August 21, 2025
0 Comment
50 Views