வாய்த்தகராறைத் தொடர்ந்து கூரிய ஆயுதத்தால் குத்தி ஒருவரைக் கொலை செய்த குற்றத்துக்காக 43 வயது முச்சக்கர வண்டி சாரதிக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் இன்று (21) மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
மார்ச் 2, 2010 அன்று ராய் பீரிஸ் எனும் நபரை கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்த வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எதிர் தரப்பினரால் சுமத்தப்பட்ட குற்றங்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டமையால் இத் தீர்ப்பு விதிக்கப்படுவதாக நீதிபதி அவரது தரப்பில் தெரிவித்துள்ளார்.