காஸா பகுதியில் தொடர்ந்து நடைபெறும் போர்களால் பாதிக்கப்பட்ட பலஸ்தீனர்களை வடகிழக்கு ஆபிரிக்க நாடான தென்சூடானில் மீள்குடியேற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து இஸ்ரேல் அரசு தென்சூடானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, இந்த விவரத்தை தென்சூடான் அரசாங்கம் ஆதாரமற்றது என மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் ஷாரன் ஹாஸ்கல் கூறுகையில்,
“பேச்சுவார்த்தை மனிதாபிமான நெருக்கடி மற்றும் இருநாட்டு உறவுகள் குறித்தது; மீள்குடியேற்றம் குறித்தது அல்ல,” எனத் தெரிவித்தார்.
ஆயினும், காஸாவை விட்டு வெளியேற விரும்பும் பலஸ்தீனர்களுக்கான புதிய இடங்களை பற்றி சில நாடுகளுடன் பேச்சுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் உறுதிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், காஸா மக்கள் தென்சூடானுக்கு இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படும். பல அரபு நாடுகள், காஸா மக்களை வெளியேற்றும் திட்டங்களை தீவிரமாக எதிர்க்கின்றன.