கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 17.08.2025 ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியேறும் முனையத்தில் ஏற்பட்ட நெரிசலால் பலர் தமது விமானங்களைத் தவறவிட்டுள்ளனர்.
பயணிகளின் கூற்றுப்படி, ஒரே நேரத்தில் பல விமானங்கள் திட்டமிடப்பட்டதால், கடுமையான நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட பயணிகள் துறைசார் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.










