அனுராதபுரத்தில் புதையல் தோண்டியதாக பிரதி பொலிஸ் மாஅதிபரின் (DIG) மனைவி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கையின்போது DIG-ம் அனுராதபுரத்தில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பால் காணிக்கை நிகழ்விற்காக அனுமதி பெற்றிருந்த அவர், கொழும்பில் நடந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
மனைவியை விடுவிக்க அனுராதபுர பொலிஸ் நிலைய தலைவருக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு. விசாரணை தொடர்கிறது.