இஸ்மதுல் றஹுமான்
மினுவண்கொடையில் வீடொன்றை சோதனையிட்டதில் ஆயுதங்கள் துப்பாக்கிச் சன்னங்களுடன் சந்தேக நபர் ஒருவரை மினுவண்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மினுவண்கொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சுபாஸ் பியதர்ஷனவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய 15ம் திகதி வெள்ளிக்கிழமை காலை குறித்த வீட்டை சுற்றிவலைத்து தேடுதல் நடாத்தியபோது ரி 56 துப்பாக்கி ஒன்று, அதன் துப்பாக்கிச் சன்னங்கள் 15, தன்னியக்க கைதுப்பாக்கி அதன் 9 சன்னங்கள், ரிவோல்வர் வகை கைதுப்பாக்கி ஒன்று அதன் சன்னங்கள் 9 ,
கை துப்பாக்கி போன்று டமி துப்பாக்கி ஒன்று, 2 வாள்கள்,4 கத்திகள் என்பன கைபற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்த,தனர்.
விசாரணையின் போது மினுவண்கொட, வேயண்கொட வீதி, முதலி மாவத்தையைச் சேர்ந்த ரத்தரன் ஹந்தி சந்திம சில்வா ஜயரத்ன என்பவரை பொலிஸார் கைது செய்தனர்.
சந்தேக நபர் கட்டுநாயக்க சர்வதேசம் விமான நிலையத்தில் பாதுகாப்பு பிரிவில் கடமை புரிபவர் என தெரியவந்துள்ளது.
மினுவண்கொடை பொலிஸார் மேலதிக விசிரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.