கண்டி உதவி இந்தியத்தூதுவர் வீ.எஸ் சரன்யா தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் உதவித்தூதுவரால் இந்தியாவின் தேசிய கொடி ஏற்றப்பட்டு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முருகுவின் ஆசிச் செய்தியும் வாசிக்கப்பட்டது. இந்திய நடனங்களும் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
1947ம் ஆண்டு ஓகஸ்ட மாதம் 15ம் திகதி பிரித்தானியரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வைபவத்தில் சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் டாக்டர். ஹன்சக விஜயமுனி, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், மத்திய மாகாண பிரதான செயலாளர் அஜித் பிரேமவங்ச, கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த, பேராதனைப் பல்கலைக்கழக உபவேந்தர் ட்ரன்ஸ் மதுஜித் உற்பட பலர் கலந்து கொண்டனர்.