-கொழும்பில் மாபெரும் போராட்டம்.
அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியம் கொழும்பில் பாரிய போராட்டமொன்றை நடத்தியுள்ளது.
புதிய கல்வி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த போராட்டம் இன்று (13.08.2025) பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக நடாத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கல்வி அமைச்சுக்கு முன்பாக பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
நீர்த்தாரை பிரயோக வண்டி அத்துடன், கலகம் அடக்கும் படையினரும் தயாராக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீர்த்தாரை பிரயோக வண்டியும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
ஏ.எஸ்.எம்.ஜாவித்