கொழும்பு 12, வாழைத்தோட்டம், அல் ஹிக்மா கல்லூரியில் 2025/26ஆம் ஆண்டிற்காக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவத் தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி பட்டறை அண்மையில் கல்லூரியில் நடைபெற்றது.
பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடைபெறும் இந்த தலைமைத்துவ பயிற்சி பட்டறையில் இம்முறை வளவாளராக கல்லூரியின் பழைய மாணவரும் மனிதவள முகாமைத்துவம் தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட பயிற்றுவிப்பாளருமான நூருல் ஹக் கலந்து சிறப்பித்தார்.
இந்த பயிற்சியில் கலந்து கொண்ட 40 மாணவத் தலைவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
கல்லூரியில் பழைய மாணவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சிரேஷ்ட உளவியலாளர் ஸாதிக் ஷிஹான் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கல்லூரியின் ஒழுக்காற்று குழுவின் பொறுப்பாசிரியர் அஷ்பாக், பழைய மாணவர் சங்கத்தின் பொருளாளர் அஸ்ரின் ஹனீபா, நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான மிப்ரா சலீம், எம் எப் முனாஜி, சிரேஷ்ட பழைய மாணவரான மஸீர் மொஹிடீன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.இதன்போது எடுக்கப்பட்ட படங்களை காணலாம்.
படங்கள்: எம்.எஸ்.சலீம்













