2012 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட குழுக்களின் பரிந்துரைகளை மதிப்பாய்வு செய்வதற்கும் மேலும் பரிந்துரைகளை வழங்குவதற்கும் புதிய எல்லை நிர்ணயக் குழு ஒன்றை நியமிக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் கிராம அலுவலர் பிரிவுகளை நிறுவி திருத்தியமைக்க 2012 ஆம் ஆண்டு எல்லை நிர்ணயக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது, மேலும் அந்தக் குழுவின் பரிந்துரைகளில் சிலவற்றை மட்டுமே செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு மீண்டும் எல்லை நிர்ணயக் குழு ஒன்று நியமிக்கப்பட்ட நிலையில், அந்தக் குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சரவை அறிக்கை கூறுகிறது.
அதன்படி, இந்தக் குழு அறிக்கையின் பரிந்துரைகளை சம்பந்தப்பட்ட பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களிடம் சமர்ப்பித்து, அந்தக் குழுக்களின் பரிந்துரைகளைப் பெறுவதற்கும். அந்தப் பரிந்துரைகளை மதிப்பாய்வு செய்து பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்குப் புதிய எல்லை நிர்ணயக் குழுவொன்றை நியமிப்பதற்கும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.