வவுனியா மாநகரசபையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி சுகாதார வசதிகளின்றி கடத்தப்பட்ட 550 கிலோ மாட்டிறைச்சி நேற்று (04) கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் முறைப்பாட்டையடுத்து, தாண்டிக்குளம் பகுதியில் பஸ்ஸிலிருந்து முச்சக்கரவண்டிக்கு மாற்றப்படவிருந்த இறைச்சியை, மாநகரசபையின் பிரதி முதல்வர் ப. கார்த்தீபன் மற்றும் உறுப்பினர் அருணன் ஆகியோர் தடுத்து கைப்பற்றினர்.
இறைச்சி சுகாதாரப் பரிசோதகர் மேற்பார்வையில் எடைபார்க்கப்பட்டு, மாநகரசபை களஞ்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது.
கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் சு. காண்டீபன் தெரிவித்தார்.