இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசா பகுதியில் பணய கைதிகளாக இருப்பவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகளை வழங்குமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிராந்தியத் தலைவர் ஜூலியன் லாரிசனுடனான சந்திப்பின் போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
இஸ்ரேலிய அதிகாரிகளின் கூற்றுப்படி, தற்போது காசா பகுதியில் 50 பணயக் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 20 பேர் மட்டுமே உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.
இதேவேளை காசா பகுதியில் பணயக் கைதிகளின் நிலைமை குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை நாளை விசேட அமர்வு ஒன்றை நடத்தவுள்ளதாக இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.