சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் (PLA) 98ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு 30.07.2025 புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.
இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்து வௌியிட்ட இலங்கைக்கான சீன தூதுவர்,
“இலங்கையுடனான மூலோபாய ஒத்துழைப்பையும் பரஸ்பர நம்பிக்கையையும் சீனா எல்லா நேரங்களிலும் வலுப்படுத்தும். ஏனைய எல்லா விடயங்களிலும் இலங்கையை ஆதரிப்பதற்கு சீனா எப்போதும் முன்னுரிமை அளிக்கும்.”
இந்நிகழ்வில் கருத்து வௌியிட்ட பாதுகாப்பு பிரதி அமைச்சர்,
“68 ஆண்டுகால சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளில், நமது இரு நாடுகளும் பரஸ்பர மரியாதை, சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளன. நாடொன்றின் அளவு அல்லது பரப்பளவை பொருட்படுத்தாமல் அர்த்தமுள்ள, நீண்டகால மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை எவ்வாறு கட்டியெழுப்ப முடியும் என்பதற்கு இதுவொரு சிறந்த உதாரணமாகும்”