புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்கம் உட்பட சகல பல்கலைக்கழகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விரிவுரையாளர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு 30.07.2025 புதன்கிழமை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது.
புதிய கல்வி சீர்திருத்தம் ஊடாக மேற்கொள்ளப்படும் பாடத் திட்ட சீர்திருத்தம், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல், மொடியூல் மட்டும் செயற்பாடு உட்பட முழு கல்வி சீர்திருத்தம் தொடர்பாக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம் கருத்து தெரிவித்தது.
இதன்போது முன்வைக்கப்பட்ட புதிய யோசனை மற்றும் கருத்துக்கள் தொடர்பாக பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக வழங்கப்படும் புதிய கருத்துக்கள் குறித்து பிரதமர் மதிப்பீடுகளை மேற்கொண்டார்.
இதன் போது, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலகக் கழுவெவ உட்பட அரச உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.