அரசாங்க நிதி பற்றிய குழு மற்றும் வழிவகைகள் பற்றிய குழுவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த ஜயவீர நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷண சூரியப்பெரும தனது பாராளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகியதன் காரணமாக அரசாங்க நிதி பற்றிய குழு மற்றும் வழிவகைகள் பற்றிய குழுவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு பாராளுமன்ற நிலையியற் கட்டளை 130(3) இன் ஏற்பாடுகளின் பிரகாரம், 2025 ஜூலை 24 ஆம் திகதி தெரிவுக்குழுவினால், பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த ஜயவீர அந்தக் குழுக்களில் பணியாற்றுவதற்காக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார் என சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன 25.07.2025 வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் அறிவித்தார்