ஜப்பானுடன் பாரிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டிய பின்னர், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15 சதவீதமாக தீர்வை வரியை குறைக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
தனது ட்ரூத் சோஷியல் கணக்கில் பதிவொன்றையிட்டு, இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு ஜப்பானிய முதலீட்டில் 550 பில்லியன் டொலர்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முடிவு அமெரிக்காவிற்கு நல்ல காலத்தைத் தரும் என்றும் ஜப்பானுடனான உறவுகளை மேம்படுத்தும் என்றும் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜப்பான் மற்றும் தென் கொரியா உட்பட 14 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத தீர்வை வரியை விதிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னர் தீர்மானித்திருந்தார்.
குறித்த வரிகள் விதிக்கப்படுவது குறித்து டிரம்ப் எழுத்துப்பூர்வ அறிவிப்பை வௌியிட்டிருந்த நிலையில், இந்த வரிகள் ஓகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அமுல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.