பல்கலைக்கழக மாணவர் ஒருவர் வங்கிக் கணக்கை ஒன்லைனில் அனுமதியின்றி அணுகி 5 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பல்கலைக்கழக மாணவர் நேற்று (17) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வவுனியாவைச் சேர்ந்த 25 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து குற்றப்புலனாய்வு பிரிவின் சைபர் குற்றப் பிரிவு விசாரணைகளைத் ஆரம்பித்துள்ளதுடன் கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

July 18, 2025
0 Comment
71 Views