இஸ்மதுல் றஹுமான்
விமானப் பயணி ஒருவர் இதுகால வரையில் இலங்கைக்குள் கொண்டுவந்த 35 கிலோ கிராம் பாரிய தொகை தங்கத்தை கைபற்றி ஒருவரை கைது செய்ததாக சுங்க ஊடகப் பேச்சாளர் மேலதிக சுங்க பணிப்பாளர் நாயகம் சீவலீ அருக்கொட தெரிவித்தார்.
கொழும்பு, கிரேன்பாஸைச் சேர்ந்த 32 வயது வர்த்தகர் 15ம் திகதி காலை டுபாய் நாட்டிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியுளளார்.
அவரின் பயணப் பொதியை சுங்க அதிகாரிகள் பரிசீலித்த போது வாகண உதிர்பாகங்கள் போல் தென்படும் விதத்தில் விசேடமாக அமைக்கப்பட 09 உபகரணங்களில் மறைத்து வைத்திருந்த தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் 135 தங்க பிஸ்கட்டுகள் மற்றும் 13 கிலோ கிராம் தங்க நகைகள் இருந்துள்ளன. இது 35 கிலோ கிராமுக்கு அதிக நிரையுடையதாகும்.
இது இலங்கை சுங்க அதிகாரிகள் இலங்கையில் கைபற்றிய பாரிய தங்கமாகும்.
சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.