ஜூலை 15 ஆம் திகதி உலக இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு குருணாகல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் வடமேல் மாகாணத்தின் சகல அரசர் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒன்றிணைந்து பல்வேறு விசேட நிகழ்வுகளை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளன.
அதன்படி, சகல நிறுவனங்களும் ஒன்றிணைந்து குருணாகல் நகரில் வீதி ஊர்வலம், மாகாண சபை கேட்போர் கூடத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் தொடர்பான விரிவுரை மற்றும் கலந்துரையாடல், தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கண்காட்சியில் திறந்த தினம் (open day) போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையினால் ஜூலை 15ஆம் திகதி உலக இளைஞர் திறன் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் இளைஞர் யுவதிகள், தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மைக்கான திறமையினால் அத்துடன் ஆயுதமேந்தலின் தந்திரோபாயத்தின் முக்கியத்துவம் போன்ற உலக சாவால்களுக்கு முகம் கொடுத்து நிலைபேறாண அபிவிருத்தி இலக்கை அடைவதற்கு பலம் பெறுவதே இதன் இலக்காகும்.
உலக இளைஞர் திறன் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு உலகம் முழுவதும் போன்று தேசிய மற்றும் பிரதேச மட்டத்திலான பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.