ரஷ்யாவுக்கு எதிரான போரில், உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்களை அமெரிக்கா வழங்கவுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்
வெள்ள மாளிகையில், நேற்று (7) நடைபெற்ற பத்திரிகையாளர்களுடனான சந்திப்பில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் குறித்து ட்ரம்ப் பேசினார்.
ரஷ்யாவால் அதிக பாதிப்புகளை உக்ரைன் சந்தித்துள்ளதாகக் கூறிய அவர், ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீர் புட்டின் மீது தான் மகிழ்ச்சியாக இல்லை எனவும், உக்ரைனின் தற்காப்பிற்காகக் கூடுதல் ஆயுதங்கள் அனுப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதம் வழங்குவது, கடந்த சில நாள்களுக்கு முன்பு ட்ரம்ப்பால் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, ரஷ்யாவின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் உக்ரைன் பலத்த சேதாரங்களைச் சந்தித்து வந்தது.