பாடசாலைகளுக்கு வருகை தரும் இலங்கை தரக் கட்டளைகள் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட நான்கு வர்த்தக நிறுவனங்களினால் மாத்திரமே செயற்படுத்தப்படும் – கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு
பாடசாலை மாணவிகளுக்காக சுகாதார துவாய்களை வழங்கும் திட்டம் 2025 இந்த வருடத்தில் பாடசாலைகளுக்கு வருகை தரும் இலங்கை தர கட்டளைகள் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டு SLS – 1732/2022 என்ற சான்று படுத்தப்பட்ட நான்கு வர்த்தக நிறுவனங்களினால் மாத்திரமே செயற்படுத்தப்படும்.
அந்த நிறுவனங்கள் பாடசாலைகளுக்கு வருகை தந்து மாணவிகளுக்கான சுகாதாரத் துவாய் பொதிகளை வழங்குவதனால், அந்த நிறுவனங்கள் தவிர்ந்த எந்த ஒரு நிறுவனங்களிடமிருந்தும் சுகாதாரத் துவாய்களை கொள்வனவு செய்ய முடியாது.