அமெரிக்க அரிசியை வாங்க ஜப்பான் விரும்பவில்லை என்று அதன் இறக்குமதி கொள்கைகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
ஜப்பான் சமீபகாலமாக, அதிக அளவு அமெரிக்க அரிசியை இறக்குமதி செய்துவருகிறது. ஏனென்றால், கடந்த ஆண்டில் உள்நாட்டில் விளையும் அரிசி விலை உயர்ந்து நுகர்வோரை பாதித்தமையே காரணமாகும் .
இதனிடையே அமெரிக்கா-ஜப்பான் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. வரும் ஜூலை 9 ம் திகதியுடன் ஒப்பந்தம் முடிவடைகிறது. இந்நிலையில் ஜப்பானிய இறக்குமதிகள் மீதான வரிகளை 30 லிருந்து 35 சதவீதம் வரை உயர்த்துவதாக கூறியுள்ளார்
இது தொடர்பாக ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அமெரிக்க அரிசி இறக்குமதியை ஏற்க ஜப்பான் தயக்கம் காட்டுகிறது.நாங்கள் இருவரும் அடுத்து ஒரு ஒப்பந்தம் செய்யப் போகிறோமா என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு அவர்கள் மீது சந்தேகம் எழுகிறது. அவர்கள் கடினமானவர்கள், அவர்களுக்கு மிகப்பெரிய அரிசி பற்றாக்குறை உள்ளது.அவர்களுக்கு இது குறித்து கடிதம் அனுப்புவோம். எங்களுடன் வர்த்தக கூட்டாளராக இருப்பதை விரும்புகிறோம்.
ஆனால் எங்களுடைய அரிசியை வாங்க தயங்குவதாக தெரிகிறது. விரைவில் வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.இவ்வாறு ட்ரம்ப் கூறினார்.