அரச கடன் முகாமைத்துவத்திற்குத் தேவையான கடன் முகாமைத்துவ மென்பொருள் தொகுதியொன்றை கொள்வனவு செய்வதற்கு நேரடி பெறுகை முறைமையைக் கடைப்பிடித்து பொதுநலவாய அமைப்பின் செயலகத்திற்கு விலைமுறியொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக 2024.10.14 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பொதுநலவாய அமைப்பின் செயலகத்திற்கு விலைமுறியொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விலைமுறி மதிப்பீட்டுக் குழு மற்றும் உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவானது, 12,500 பவுண்கள் வருடாந்த பராமரிப்புக் கட்டணத்தின் கீழ் Commonwealth Meridian மென்பொருள் தொகுதியை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை பொதுநலவாய அமைப்பின் செயலகத்திற்கு வழங்குவதற்கு விதந்துரைத்துள்ளன.
அதற்கமைய, குறித்த மென்பொருள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகளை வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் தாபிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

July 2, 2025
0 Comment
86 Views