அரச கரும மொழிகள் தினத்தை முன்னிட்டு ஜூலை முதலாம் திகதியிலிருந்து ஜூலை 5-ம் திகதி வரை அரச கரும மொழிகள் வாரமாக அனுஷ்டிக்கவுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்தார்.
30.06.2025 திங்கட்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அரச கரும மொழிகள் வாரம் தொடர்பான ஊடக கலந்துரையாடலில் கலந்து கொண்ட பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு பிரஜைக்கும் தமது மொழியில் பணியாற்றுவதற்கு சந்தர்ப்பம் காணப்பட வேண்டும் என குறிப்பிட்ட அவர் அந்த சூழலை உருவாக்குவதற்காக அரசாங்க திட்டங்கள் பலவற்றை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதில் காணப்படும் குறைபாடுகளை சரி செய்து எதிர்காலத்தை முன்னோக்கிப் பயணிக்க வேண்டும் என குறிப்பிட்ட அவர், 2019.06.12 அரச கரும மொழிகள் சுற்றுநிருபத்திற்கு அமைவாக பல்வேறு துறைகளும் செயற்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
அரச கரும மொழிகள் தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்டத்தை மையப்படுத்தி பல்வேறு திட்டங்களை செயற்படுத்துவதாகவும் தெரிவித்தார்