விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் சமித்ரி ஜெயனிகா ரம்புக்வெல்ல, பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்த பின்னர் இன்று (20) சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர், பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாததால் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
