பொத்துஹெர – குருநாகல் இடையேயான ரயில் பாதையில் 53ஆவது மைல்கல் 31 சங்கிலி தூரத்தில் புகையிரதக் கடவை அவசரமாக புனரமைக்கப்படுவதால் அப்பகுதியின் பிரதான வீதி நான்கு நாட்களுக்கு மூடப்பட்டிருக்குமென ரயில்வே திணைக்களம் அறிவித்தது.
இந்நிலையில், தற்போதைய மோசமான காலநிலை காரணமாக பொதுஹெர அமுனுகம புகையிரதப் பாதை திருத்த வேலைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.