ஜூலை மாதம் திட்டமிடப்பட்டிருந்த வருடாந்த பஸ் கட்டண திருத்தத்தை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று (01) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன, வருடாந்த பஸ் கட்டண திருத்தம் ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், இந்த விடயம் தொடர்பாக ஏனைய சங்கங்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.