நாட்டில் பெய்த கனமழை காரணமாக நேற்று (01) பிற்பகல் 1 மணி நிலவரப்படி மொத்தம் 68,248 மின் தடை முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மேலும், கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 36,915 முறைப்பாடுகள் சரிசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.