இஸ்மதுல் றஹுமான்
51 கோடி 61 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான பத்து கிலோ கிராமுக்கு மேற்பட்ட கொக்கேன் போதைப் பொருளை விமான மூலம் எடுத்த வந்த தாய்லாந்து நாட்டவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப் பொருள் தடப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சுயதொழிலில் ஈடுபடும் 38 வயதான தாய்லாந்து பெண் கண்டார் நாட்டின் தோஹா நகரிலிருந்து கண்டார் விமான சேவையின் கிவ்.ஆர்.- 662 இலக்க விமானத்தில் நேற்று 30 ம் திகதி அதிகாலை 2.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்து உள்ளார்.
கொண்டுவந்த பயனப் பொதியை பரிசீலித்த போது சீலைத்துனிகளினால் தயாரிக்கப்பட்ட மூன்று “டெடிபெயா” பொம்மைக்குள் சொக்கலெட் என நினைகும் அளவுக்கு பிலாஸ்டிக் உரைகளில் மறைத்து வைத்திருந்த கொக்கேய்ன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் 10 கிலோ கிராம் 323 கிராம் நிரையுடைய கொக்கேய்ன் வில்லைகள் 500 இருந்துள்ளன. கைதுசெய்யப்பட்ட தாய்லாந்து நாட்டுப் பெண்ணையும் கைபற்றப்பட்ட கொக்கேய்ன் வில்லைகளையும் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப் பொருள் தடுபொபுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.