இஸ்மதுல் றஹுமான்
சர்வதேச சமையல்காரர் போட்டியில் பதக்கங்கள் வென்ற மூன்று இலங்கையர்கள் தமது பதங்களுடன் நேற்று 29ம் திகதி காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை
வந்தடைந்தனர். உலகின் 20 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்ற 26வது "எக்ஸ்போ குளினெய்ர்" சர்வதேச
சமையல்காரர் போட்டி ஐக்கிய அரபு இராச்சிய நாட்டின் ஷார்ஜா நகரில் இடம்பெற்றது.
இலங்கையைப் பிரதிநிதித்துவப் படுத்திய மூன்று சமையல்காரர்களும்
4 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை என 10 பதங்கங்களை வென்றனர். கடந்த 21ம் திகதி முதல் 23ம் திகதி வரை
இடம்பெற்ற இப் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சமையல்காரர் கஸ்தூரி ராமேஸ்வரன் ஒரு தங்கப் பதக்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் 02 வெண்கலப்
பதக்கங்களை வென்றார்.
நீர்கொழும்பு பேரியமுல்லையைச் சேர்ந்த எஃப். நிலுஃபா, இந்தப் போட்டியில் ஒரு தங்கப் பதக்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
அவர் நீர்கொழும்பில் ஒரு சமையல் பயிற்சி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
கொழுப்பை வசிப்பிடமாகக் கொண்ட எம்.ஆர்.எஃப். ஃபஸ்லியா 02 தங்கப் பதக்கங்களையும் 01 வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.
இவர்கள் மூவரும் முதல் முறையாக சர்வதேச போட்டி ஒன்றில் பங்கேற்று இத்தகைய வெற்றிகளைப் பெற்றது விஷேட அம்சமாகும். எயார் அரேபியா விமான சேவையின்
ஜி 9 இலக்க விமானத்தில் 29 ம் திகதி வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். அங்கு அவர்களுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.