நாட்டின் சுகாதாரத் துறையை வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் 24.05.2025 சனிக்கிழமை நடைபெற்ற தாதியர்களுக்கு நியமனக் கடிதங்களைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் இதன்போது 3,147 தாதியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் 83 பேர் தாதியர் சேவையின் சிறப்புத் தரத்திற்குப் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.