இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பு, கொப்பரா சந்தியில் அமைந்துள்ள ஸ்ரீ விஜயபால மென்டிஸ் சர்வதேச பெளத்த நிலையம் முதல் தடவையாக ஏற்பாடு செய்த தரம விஜய வெசக் வலயம் நிகழ்வுகள் 12 ம் திகதி முதல் 28 ம் திகதி வரை நடைபெறுகின்றன. முதல் நாள் இடம்பெற்ற பெரஹரா, வெசக் பந்தல், வெசக் வெளிச்சக் கூடு, ஸ்ரீ சர்வதாது கணகாட்சி மற்றும் பக்தி கீதம் என்பன இடம்பெற்றன.
பிரதி அமைச்சர் சுதத் திலக்கரத்ன, முன்னாள் நீர்கொழும்பு மேயர் தயான் லான்ஸா ஆகியோர் வெசக் பந்தலை ஒளியேற்றி திறந்துவைத்தனர். நீர்கொழும்பு மாநகர ஆணையாளர் நுவனி சுதசிங்க, மேயராக பொறுப்பேற்கவுள்ள சட்டதரணி ரொபட் ஹீன்கெந்த ஆகியோர் உட்பட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.