யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்திய நபரொருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி – மட்டுவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே 12.05.2025 திங்கட்கிழமை இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த நபர் கடந்த 11ஆம் திகதி காணாமல் போன நிலையில் உறவினர்களால் தேடப்பட்டு வந்துள்ளார். பின்னர் வீடொன்றுக்கு அருகில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்தியதன் மூலமே அவர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்